Thursday, April 28, 2011

தீமிதிக் குண்டம்!

 
Posted by Picasa
சென்ற வாரம் ஊருக்குப் போனப்போ மாரியம்மன் கோயிலில் தீமிதிக்கான அக்னிக் குண்டத்தை எழுப்பிக்கொண்டிருக்கும் ஊழியர்கள். அம்மன் புறப்பாடு ஆகி ஊர்வலம் வந்து பின்னர் கோயிலுக்கு எதிரே இருக்கும் வயல்வெளியில் ஒரு இடத்தில் பள்ளம் தோண்டி அதிலே நெருப்பைக் காலையிலேயே மூட்டி விடுகின்றனர். மேலேமேலே கட்டைகள் போடப்பட்டு வைக்கோலால் மூட்டம் மாதிரிப் போட்டு வைக்கின்றனர்.

இந்தத் தீமிதிக்கெனப் பிரார்த்தனை செய்து கொண்டவர்கள் மட்டுமே கலந்து கொள்ள முடியும். ஒரு மாதம் முன்னாலிருந்து விரதம் இருப்பார்கள். ஒருவேளை உணவு மட்டுமே உட்கொள்ளுவார்கள். ஒரு சிலர் கோயிலிலேயே தங்குவதும் உண்டு. தலையில் கரகம் வைத்துக்கொண்டோ அல்லது காவடி எடுத்தவண்ணமோ இறங்குவதாய் வேண்டிக்கொள்வதும் உண்டு. இங்கே காவடியின் ஒரு வகையைப் பார்க்கலாம். 
Posted by Picasa
இங்கே இன்னொருத்தர் அலகு குத்திக்கொண்டு காவடி எடுத்து வருகிறார்.  
Posted by Picasa
முதலில் குண்டம் இறங்குவதற்கு உரிமை உள்ளவர் அந்த அந்தக் கோயிலின் பூசாரிகளே ஆவார்கள். ஒரு சில கோயில்களில் ஊர்ப் பெரியவர்கள் இறங்கலாம். என்றாலும் பூசாரியே முதலில் இறங்குகிறார். அக்னியில் இறங்கியதும், காலை உடனே தரையில் மண்ணிலோ, வைக்கக் கூடாது என்பதால், 
Posted by Picasa
ஒரு பெரிய அண்டா நிறையப் பாலை வாங்கி, அதைத் தீமிதிக்குண்டத்தின் அருகே ஒரு பள்ளம் தோண்டி அதில் ஊற்றிவிடுகின்றனர். தீமிதிப்பவர்கள் அந்தப் பாலில் காலை நனைத்துக்கொண்டு பின்னரே மேலே ஏறுகின்றனர். இதோ இங்கே பள்ளத்தில் ஊற்றப்பட்ட பால்.  
Posted by Picasa

2 comments:

  1. தீமிதி என்றாலே சினிமாக்களில்தான் பார்த்திருக்கிறேன் கங்குகள் கனலாய் தெரிய. இங்கே பார்க்க வித்தியாசம். பாலில் கால் நனைப்பதும் புதுத் தகவல்.

    ReplyDelete
  2. அட?? நிஜம்மாவா?? தீமிதிக்கான ஏற்பாடுகளை எல்லாம் பார்த்திருக்கேன், நேருக்கு நேரே தீமிதியைப் பார்க்க முடிந்ததில்லை. :( இங்கே சென்னையில் எல்லாம் அநேகமாய் இரவுகளில் நடக்கும். பத்து மணிக்கு மேல், அதனால் போக முடிந்ததில்லை. இது மாலை நேரம்னு சொன்னதாலே போனோம். கூட்டம் தாங்கலை.

    ReplyDelete