Thursday, June 2, 2011

பிள்ளையார் கேட்ட 108 தேங்காய்கள்!

 கும்பகோணம் மடத்துத் தெரு பகவத் விநாயகருக்கு 108 தேங்காய் உடைக்கிறதாய் வேண்டுதல். பொதுவாய் நான் ரொம்ப வேண்டிக்கவே மாட்டேன். ஆனால் நாங்க திருக்கைலை யாத்திரை போகும் முன்னர் கும்பகோணம் போய் பகவத் விநாயகருக்குப் பழைய பாக்கி என் கணவர் வைச்சிருந்த 108 தேங்காய் வேண்டுதலை நிறைவேற்றினோம். அப்போத் தான் அதற்கு அடுத்த மாசம் கைலை யாத்திரைப்பயணம் துவங்கணும்.
 அப்போ வேண்டிக்கொண்டேன், நல்லபடியாப்போயிட்டு வந்ததும் பிள்ளையாருக்குத் தேங்காய் உடைக்கிறேன்னு. அதை இத்தனை நாட்களா நிறைவேற்ற முடியலை. சென்ற வாரம் ஒரு சொந்தக் காரியமா ஊருக்குப் போனப்போ வீட்டிலே தென்னை மரத்திலே தேங்காய் பறிச்சிருந்தாங்க. அதை நான்கு நாட்களா உரிச்சு எடுத்தார் நம்ம ரங்க்ஸ், பாவம். வண்டியிலேயே போனதால் வண்டியிலே தேங்காய் மூட்டையைப் போட்டுண்டு போயிட்டோம். பாவம் கூட வந்த சம்பந்திகள் சூட்கேஸ் வைக்க இடமில்லாமல் போச்சு! :௶
 
Posted by Picasa
சனிக்கிழமை சாயந்திரமே தேங்காய்களை உடைச்சோம். எங்க சம்பந்தி, நம்ம ரங்க்ஸ், வண்டி ஓட்டிய டிரைவர் மூணு பேருமே உடைச்சாங்க. நானும் சாஸ்திரத்துக்கு ஒண்ணு உடைச்சேன். சம்பந்தி அம்மாவும் உடைச்சாங்க.

5 comments:

  1. வேண்டறத வேண்டிண்டு அவர் கேட்டாராமா? கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்!

    ReplyDelete
  2. //நானும் சாஸ்திரத்துக்கு ஒண்ணு உடைச்சேன்//
    ஓஹோ! என்ன சாஸ்திரம் அது? :P:P:P

    ReplyDelete
  3. @திவா, க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் நான் ஒண்ணும் வேண்டிக்கலை, பிள்ளையார் தான் கேட்டாராக்கும். :D

    ReplyDelete
  4. ஒரு சாஸ்திரமும் இல்லை, என்னோட வேண்டுதல்ங்கறதாலே நானே உடைக்கணும்னு சொன்னாங்க. நூத்தியெட்டையும் எப்படி உடைக்கிறது? ஒண்ணே ஒண்ணு உடைச்சேன். :)))))

    ReplyDelete
  5. "பிள்ளையார் கேட்ட தேங்காய்" கடன்முடிந்துவிட்டது :)))

    ReplyDelete