Friday, December 16, 2011

ரெண்டு ரெண்டாப் பாருங்க

ஹிஹிஹி, இது பிட் ரெட்டையர் போட்டிக்கெல்லாம் இல்லைங்க. சும்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மா கிடைச்சது தோண்டியதிலே.
இவங்களும் தான் கிடைச்சாங்க.ஒரு புதையலே கிடைக்குது.

நம்மாளுப்பா இவரு! இவரு மாதிரி இன்னும் இருக்காங்க!

ஹாஹாஹா, ரெண்டு நாளாவே நம்மாளுங்களாக் கண்ணிலே படறாங்கப்பா. இவர் எப்படி இருக்கார்? நல்லா ஜாலியாச் சாப்பாடு சாப்பிடறார்.

Wednesday, December 14, 2011

இவரைப் பாருங்க அதிசயமா இருக்கார்!

இன்னிக்கு ஆல்பத்தில் ஒரு சில படங்களைக் காணோமேனு தேடிட்டு இருந்தப்போ கிடைச்சார் நம்ம நண்பர் இப்படி ஒரு கோலத்தில். எனக்கே தெரியலை; இவர் எங்கேருந்து எனக்குக்கிடைச்சார்னு. தெரிஞ்சவங்க சொல்லுங்கப்பா. இன்னிக்குத் தான் புதுசாப் பார்க்கிறேன் இவரை இந்தக் கோலத்தில்.

Thursday, December 8, 2011

ஸீ வேர்ல்ட் காட்சிகள் இன்னும் சில!

சீ லயன்கள், வால்ரஸ் எல்லாம் அடித்த லூட்டி தாங்கவில்லை. கடைசியில் எல்லாமாகச் சேர்ந்து கொண்டு கிறிஸ்துமஸுக்காக அலங்காரங்கள் செய்தன. மிக அருமை. நன்கு பழக்கி இருக்கிறார்கள்.
இது குழந்தைகளுக்கான ஜிங்கிள் பெல் ஷோ. நடித்தவர்கள் எல்லாருமே குழந்தைகள் தான் என்பது எங்கள் கட்சி. எங்க பையரோ இது குழந்தைகளால் நடிக்கப்படவில்லை. குரல் மட்டும் கொடுத்திருக்காங்க. ஏனெனில் ஒவ்வொரு இரண்டு மணி நேர இடைவெளியிலேயும் நிகழ்ச்சி நடக்கிறது. குழந்தைகளை அவ்வாறு பழக்க இயலாது என்பது அவர் சொல்வது. இந்நிகழ்ச்சி கிறிஸ்துமஸ் பற்றிய முக்கியத்துவத்தை அதன் புனிதத்தை எடுத்துக்கூறுவது. எல்லாமே நர்சரி ரைம்ஸில் இருப்பதால் நிகழ்ச்சிக்கு வந்த அத்தனை குழந்தைகளும் மேடைக்கு அருகே போய்விட்டன. நம்ம ஊரா இருந்தால் அப்பா, அம்மா விட மாட்டோம். அல்லது அதட்டிக் கூட்டி வருவோம். அங்கே கவலையே பட்டுக்கலை. அடுக்கடுக்கான படிக்கட்டுகளின் வழியே கீழே உள்ளதொரு நட்டநடு மேடையில் நிகழ்ச்சி. நாங்க உட்கார்ந்திருந்தது மிக உயரத்தில். அதனால் படம் கொஞ்சம் தெளிவாக வரவில்லை. பையர் காமிராவில் இது கூட வரலைன்னார். (மை காலர்ஸ் அப்)
இது ஒரு வாட்டர் ரைட். இரண்டு விதமாக இருக்கிறது. ஒரு வாட்டர் ரைட் ரோலர் கோஸ்டரில்; மேலே ஏஏஏஏஏஏஏஏஏ போகவேண்டும். பின்னர் வேகமாய்க் கீழே இறங்க வேண்டும். இறங்குகையில் முழுதும் நனைந்துவிடுவதால் அதிலே செல்லவில்லை. அதோடு அத்தனை உயரமும் யோசனையாய் இருந்தது. சாப்பிட்டது வெளியே வந்துடும். இந்த வாட்டர் ரைடில் குறைந்த பக்ஷமாய் நான்கிலிருந்து ஐந்து பேர்தான் போகலாம். துடுப்பெல்லாம் கிடையாது. தண்ணீரின் வேகத்தில் தானாகவே செல்லும். அந்த வேகத்தில் மேலே ஏறி, கீழே இறங்கி சுற்றிச் சுழன்று செல்வதைப் பார்த்தால் கல்கியின் பொன்னியின் செல்வனில் கடல் சூறாவளி சமயம் பூங்குழலி அருள்மொழி வர்மனோடு வந்தியத் தேவனைச் சுழலில் இருந்து காப்பாற்றியதே நினைவில் வந்தது. இதில் போனோம். உடை நனையவே செய்தது.
அந்த ஊரைச் சுற்றிக்காட்டும் குதிரை வண்டி. இரண்டு, மூன்று குதிரை வண்டிகள் இருக்கின்றன. எவ்வளவு சார்ஜ் வாங்கறாங்கனு தெரியலை. நாங்க போகலை.