Wednesday, July 22, 2015

ஶ்ரீரங்கம் ரங்குவை விடப் பெரிய ரங்கு யார் தெரியுமா?

இந்த வலைப்பக்கம் பதிவிட்டுக் கிட்டத்தட்ட ஒரு வருஷம் ஆகப்போகிறது. மற்றப் பதிவுகளில் வராத படங்களை இங்கே பகிரலாம் என்று ஓர் எண்ணம். 


இன்னம்புராரைப் பார்க்கக் காரைக்குடிக்குச் செல்லும் வழியில் திருமயம் கோயில்களைப் பார்த்தோம். முதலில் பெருமாள் கோயில். அப்போது எடுக்கப்பட்டது. இதைக் குறித்து முழுதும் எழுதி முடிக்கவில்லை. பாதியிலேயே நின்று விட்டது. அதே போல் தான் கொளஞ்சியப்பர் கோயில் போனதும் பாதியிலேயே நின்று விட்டது.



உள்ளே செல்லும் வழி. நம்ம முன்னோர்கள் நிறையவே இருந்தனர். ஆகையால் காமிராவை எடுக்கவே பயமாகத் தான் இருந்தது. வெளியே நின்ற வண்ணம் எடுத்த படம் இது. 


குடவரைக் கோயிலான இங்குள்ள மூலவர்  திருமெய்யர் (பள்ளி கொண்ட பெருமாள்) இந்தியாவிலேயே பெரிய திருமேனி என்கின்றனர். 108 திவ்ய தேசத்திலே 43 ஆம் திவ்யதேசம் ஆகும்.  இதை ஆதிரங்கம் என்றும் கூறுகின்றனர். ஶ்ரீரங்கம் ரங்குவை விட இவர் ரொம்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்பப் பெரியவர். பனிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறையே இவருக்குத் தைலக்காப்பு!

1 comment: